தருமபுரி, தொன் போஸ்கோ கல்லூரியில் 2020-21ஆம் கல்வியாண்டில் இளங்கலை, முதுகலை பாடப்பிரிவுகளில் முதலாமாண்டு சேரும் அனைத்து மாணாக்கருக்கும், தற்போது நிலவிவரும் கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக ஏற்பட்டிருக்கும் நிதி நெருக்கடியைக் கருத்தில் கொண்டு, முதல் பருவத்திற்குக் கட்டண விலக்கு அளிக்கப்படுகிறது. அதன்படி இவ்வாண்டு சேரும் மாணாக்கர், முதல் பருவக் கல்விக் கட்டணத்தைச் செலுத்தத் தேவையில்லை. செப்டம்பர் 30 வரை மட்டுமே இச்சலுகை உண்டு என நிர்வாகத்தின் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.